Header Ads

லண்டனில் வருங்கால போராளிகள் மாவீரர் நினைவு நாளில் துடிதுடிப்பாக பங்கேற்ற இளையோர்கள்



நேற்றைய தினம் நடந்த லண்டன் மாவீரர் தினத்தில், பல இளையோர்கள் துடி துடிப்பாக பங்கேற்றிருந்தார்கள். இதில் பல சிறுவர்களும் அடங்குவார்கள். அம்மா ஈழத்தில் என்ன நடந்தது ? அம்மா உங்கள் தம்பி எவ்வாறு இறந்தார் ? அங்கே சிங்களவர் என்ன செய்தார்கள் ? என்ற கேள்விகளே இளையோர் மத்தியில் இருந்தது. கண்களில் கண்ணீர் சிந்த ஒருவ்வொரு பெற்றோரும். மாவீரர்களது உறவினர்களும் தமது உறவுகள் எவ்வாறு இறந்தார்கள் என்று இளையோர்களுக்கு கூறிக்கொண்டு இருந்ததை காண முடிந்தது.

30,000 ஆயிரத்திற்கும் அதிமான தமிழர்கள் கலந்துகொண்ட இன் நிகழ்வுகளில், சில பிரித்தானிய ரகசியப் பொலிசாரும் ஊடுரு இருந்தார்கள். 2009ம் ஆண்டுக்குப் பின்னர் இனி தமிழர்கள் எழுச்சி கொள்ள மாட்டார்கள். புலிகளுக்கு இருந்த ஆதரவு மலையேறிவிட்டது. இனி போராட்டம் என்பது எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது என்று கனவு கண்ட பலருக்கு, நேற்றைய நிகழ்வு ஒரு பெரும் இடிதான். தமிழர்கள் இன்னும் அதே வேட்கையோடு தான் இருக்கிறார்கள் என்று உலகிற்கு நாம் மீண்டும் ஒரு முறை எடுத்துக்காட்டியுள்ளோம்.

வீட்டில் இருந்தே தீபம் எற்றிவிட்டு, வீட்டில் முடங்கிக் கிடப்போம் என்று ஐ.பி.சி வானோலியில் வந்த சிலர் கருத்து தெரிவித்தார்கள். இக்கருத்தை யார் சொல்ல வைத்தார்கள் இதனை ஏன் அந்த வானோலி தாங்கி வந்தது என்பது போன்ற பல சந்தேகங்கள் இருந்து வந்தது. மாவீரர் தினத்தை முடக்க சில சக்திகள் செய்த அனைத்து சூழ்ச்சிகளும் உடைக்கப்பட்டு, இறுதியில் மாவீரர்கள் வென்றுள்ளார்கள். 

No comments:

Powered by Blogger.